ஆயிரத்தில் ஒருவன் – தமிழில் ஆயிரத்தில் ஒன்றான சலனம்

தமிழுக்கு இது மிக மிகப் புதுசு. கதை, கதைக்களம், கதை சொன்ன விதம், காட்சிப்படுத்திய தன்மை, எல்லாம் தமிழ்த்திரைக்கு மிக மிகப் புதுசு. ஓர் ஆங்கிலப் படத்தைப் பார்த்தது போல இருக்கின்றது என்ற வகையான பேய்த்தனமான உளறல்கள் என்னிடம் இல்லை. ஆனால் இது தமிழில் புதிய தேடல், புதிய படைப்பு. முதலில் செல்வராகவனுக்கும், அவர்தம் குழுவினருக்கும் கைகளை இறுகப் பற்றியபடி மகிழ்வையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டு அடுத்த பந்திக்குப் போகின்றேன்.
அதற்கு முன் ஒரு வாக்கியம், தயவுசெய்து [...]

பொங்கி வருகின்ற புதுவெள்ளம்

புதுவெள்ளம் பாயுமாற் போலத்தான் அது இருக்கிறது. இது புதுவெள்ளம் தான் என்று தெரிந்தே தான் சொல்கிறேன். அடிக்கடி அல்லது விட்டு விட்டுப் பாய்வதனால் அது பழைய வெள்ளமாகி விடாது.
1930களில் தமிழ்த் திரைப்படங்கள் பேசாப் படங்கள் வரத் தொடங்குகின்றன. (பேசாப் படங்கள் என்றால் பிறகென்ன ‘தமிழ்ப்’ படங்கள்?) இவ்வாறு தொடங்கி வரலாறு எழுதுவது என் பணி அல்ல. நான் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கின்ற போது அதனைச் செய்கின்றேன் அல்லது ஆய்வு மாணவர்கள் அதனைச் செய்யட்டும். என் எண்ணம் இப்போது [...]