யாரறிவார் வன்னிப் பெருந்துயரை…? துயர் 2

சொல்லியழ எவருமின்றி!
யுத்தத்தின் சுமையை கிழக்கும், வன்னியும் பெரிதும் சுமந்தன. கிழக்கு விதவைகள் நிறைந்த பூமியாய் மாறியது. வீட்டுக்கு வீடு கொல்லப்பட்ட குடும்பங்களாய் முதலில் கிழக்கு மாறியது. இராணுவம் அதிகம் வாய் வைத்ததும், கடித்து குதறியதும் முதலில் கிழக்கைத்தான். யுத்தத்தின் முழு வடுக்களும் கிழக்கில் படிந்திருந்தது. எதிரி கிழக்கைக் குறிவைத்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து முடித்தான்.
அடுத்து எதிரியின் கவனம் வன்னி மண்ணில் பாய்ந்தது. தமிழீழத் தேர் வன்னி மக்களின் முதுகில் உலகை வலம் வந்தது. [...]

யாரறிவார் வன்னிப் பெருந்துயரை…! துயர் 1

1. இராணுவத் தேரும், அரசியற் குதிரையும், இராஜதந்திரப் பாகனும்.
‘அனைத்தும் அரசியலுக்கு கீழ்ப்பட்டவை. எல்லாவற்றையும் அரசியலாகப் பார்’ என்று அரசியல் பற்றி தத்துவஞானி ஒருவரால் கூறப்பட்ட மகுட வாக்கியம் அரசியல் நுழைவாயிலுக்கான அகரமாய் உள்ளது.
யுகம் கடந்த விஞ்ஞானியான அயன்ஸ் ரீனே அணுகுண்டின் பிதாமகனாய் இருந்த போதிலும், அணுகுண்டைப் பிரயோகிப்பது பற்றிய தீர்மானத்தை அரசியல்வாதியே எடுக்கின்றான். எப்படியோ விஞ்ஞானம் அரசியலுக்கு கீழ்ப்பட்டும், கட்டுப்பட்டுமே இயங்க வேண்டியுள்ளது.
‘சட்டிக்குள் மசியும் கீரைக்குள்ளும் அரசியல் உண்டு’ என்ற வாக்கியம் மிகவும் கருத்துக்கு எடுக்கப்படக் கூடியது. [...]

தமிழின அழிப்பின் உச்சம்: ஐ.நா சாசனத்தை முன்வைத்து ஒரு நோக்கு

தனது இராணுவ இயந்திர மேலாதிக்க அடக்குமுறைக்கு ஊடாக தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை முற்று முழுதாக நசுக்குவதும், தமிழினத்தை சரணாகதி அடைய வைத்தலுமே பேரினவாதத்தின் மூலோபாயமாக இருந்து வந்துள்ளது.
காலங்காலமாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்களத் தலைமைகள், இராணுவ அடக்குமுறையைக் கருவியாகக் கொண்ட மூலோபாயத்தையே கையாண்டன. இன அழிப்பே பேரினவாத அரச இயந்திரத்தின் நிகழ்ச்சி நிரலாக இருந்து வந்துள்ளது.
இன்று தமிழர் தாயகம் முழுவதும் பௌத்த சிங்கள இன மேலாதிக்க ஆக்கிரமிப்பால் விழுங்கப்பட்டுள்ளது. முட்கம்பி வதைமுகாம்களாகவும், திறந்தவெளிச் [...]