ஈழப்போராட்டம் – தேங்கி நிற்கின்ற சுயவிமர்சனம்
யமுனா ராஜேந்திரன்
உலகப் புரட்சிகர இயக்கங்கள் என எடுத்துக் கொண்டால், அக்டோபர் புரட்சி தொட்டு இன்று வரையிலும் இரண்டு மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
முதலாவது ரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் நிகழ்ந்து முடிந்த சோசலிசத்தின் வீழ்ச்சியைக் குறிப்பிடலாம். இரண்டாவதாக சோசலிச சீனா முதலாளித்துவச் சந்தைப் பொருளாதாரத்தையும், தனிநபர் சொத்துடமையையும் அங்கீகரித்திருப்பதனையும் நாம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் முன்னதாக ரஸ்யாவில் லெனின் பின்னரான ஸ்டாலினது அரசியல் காலம் பற்றியதும், சீனாவில் மாவோவினது அரசியல் காலம் பற்றியதுமான விமர்சனப் பின்னணி [...]