வணக்கம் “மாமன்னரே”!

“சித்த சுவாதீனமற்ற நிலைக்கான வரைவிலக்கணம் என்னவென்றால் ஒரு விடயத்தை ஒரேமாதிரியாக திரும்பத் திரும்பச் செய்து கொண்டு வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்ப்பது” – விஞ்ஞான மேதை அல்பேர்ட ஐன்ஸ்ரைன்.
இளம் சிங்களப்பாடகி சகலி ரோச்சனா கமகே பாடிய “ஆயுபோவெவ மகரஜனாய் …” (வணக்கம் மாமன்னரே) என்று ஆரம்பிக்கும் பாடல் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது. போரில் தமிழர்களை வென்றதற்காக மகிந்த இராஜபக்சவை மாமன்னராக உருவகித்து பாடும் வாழ்த்துப்பாவாக இப்பாடல் அமைந்திருக்கிறது. இப்பாடலின் வரிகளில் உங்களுக்கு உடன்பாடில்லாவிட்டாலும் சகலியின் குரலினிமைக்காக பாடலை [...]

மகிந்தவை தண்டிப்பதானால் அவர் மீள வெற்றிபெற வேண்டும்.

“உங்களை தமிழர்களின் நிலையில் வைத்துக்கொண்டு யாருக்கு வாக்களிப்பது என்று  முடிவெடுங்கள்:  உங்கள் மீதும் உங்களது குடும்பத்தினர் மீதும் தாக்குதல்களை நடாத்துமாறு உத்தரவிட்ட அரச தலைவருக்கா, அல்லது அந்த உத்தரவுகளை நிறைவேற்றிய இராணுவத்தை, தலைமை தாங்கி நடாத்தியவருக்கா வாக்களிக்கப் போகிறீர்கள்?”
இம்மாதம் 26ம் திகதி சிறிலங்காவில் நடைபெறவிருக்கிற அதிபர் தேர்தல் தொடர்பாக நியுயோர்க் ரைம்ஸ பத்திரிகையில், ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக வேந்தரும், சர்வதேச பிணக்குகள் தொடர்பான சிந்தனை மையத்தின் இணைத்தலைவரும், கொங்கொங் நாட்டின் ஆளுனராக முன்பு கடமையாற்றியவருமான கிறிஸ் பற்றன் எழுதிய [...]